இந்திய மக்களின் உடல் அமைப்பை பொருத்தமட்டில் 18 வயதுக்கு மேல் லாக்டோஸ் சகிப்புத்தன்மை ஏற்படுவதுண்டு. இதன் காரணமாக செரிமான கோளாறுகள், குடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பால் என்பது ஒரு முக்கியமான காரணமாகும்.
பாலில் கால்சியம் சத்துக்களும் புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பால் குடிப்பதாலோ அல்லது பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வதாலோ அசிடிட்டி, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகிறது. அதே சமயம் டீ, காபி போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் குடல் அழற்சி, நோய்கள் வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. பாலில் உள்ள அதிக அளவு ஆன்ட்டிஜென்ட்கள் குடல் அழற்சி நோய்களை உண்டாக்கும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட வயது அதாவது 18 வயதுக்கு மேல் பால் குடிப்பதனால் அது குடலை தான் அதிகமாக பாதிக்கிறதாம். இதற்கு பதிலாக தயிராகவோ மோராகவோ எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதாவது பால் தயிராக புளிக்கும் போது அதில் உள்ள ஆண்டிஜெண்ட் மூலக்கூறு உடைக்கப்படுகிறது. இது ஜீரணத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதனால் தயிர் அல்லது மோர் எடுத்துக் கொள்ளும் போது பாலில் இருக்கும் கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் தயிரில் இருந்து அதிகமாக கிடைக்கின்றன. குறிப்பாக ப்ரோ பயோடிக் பண்புகள் அதிகமாக கிடைப்பதால் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.