Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சித்த மருத்துவ குறிப்புகள்!

சித்த மருத்துவ குறிப்புகள்!

-

சித்த மருத்துவ குறிப்புகள்:

மலச்சிக்கல்
மலச்சிக்கல் சரியாக அகத்திக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதனை காலை, மாலை என இரு வேளைகளில் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமடையும்.

வாத நோய்
வாத நோய் குணமாவதற்கு குப்பைமேனி இலை சாறை எடுத்து தினமும் அரை டம்ளர் அளவு சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.

காது வலி
வெற்றிலை சாறை காதில் விட்டால் காது வலி குணமடையும்.சித்த மருத்துவ குறிப்புகள்!

வயிற்று நோய்
சிறிதளவு சீரகத்தை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை மோரில் போட்டு சாப்பிட்டு வர வயிற்று சம்பந்தமான நோய்கள் குணமடையும்.

சீதபேதி
சீதபேதி குணமாக, புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவைகளை இடித்து பொடி செய்து பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டு வர சீத பேதி சரியாகும்.

நெஞ்சு வலி
நெஞ்சு வலி குணமடைய, அத்தி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். அத்திப்பழங்கள் இதயத்தை பலப்படுத்த உதவுகிறது.

காதில் சீழ் வடிதல்
வெற்றிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு , சிவந்து வரும் வரை காய்ச்ச வேண்டும். அதன் பின் ஆற வைத்து ஒரு பாட்டில் ஊற்றி வைக்க வேண்டும். இதனை காலை மாலை என இரண்டு வேளைகளில் இரண்டு சொட்டு காதில் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் பிரச்சனை குறையும்.சித்த மருத்துவ குறிப்புகள்!

சிலந்தி கடி
தும்பை இலை சாறை அனைத்துவிதமான விஷக்கடிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. எனவே தும்பையிலே சாறை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

இவைகள் எல்லாம் சித்த மருத்துவ குறிப்புகள். இருந்த போதிலும் பிரச்சனை ஏற்படும் சமயங்களில் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வாமை ஏற்பட்டால் இதனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ