Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம்!

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம்!

-

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம்!ஆஸ்துமா நோய் குணமாக சுண்டைக்காயை உப்பு தண்ணீரில் ஊற வைத்து பின் அதனை காய வைத்து வறுத்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

அதேபோல் சிறுகுறிஞ்சா வேர் பொடி, திரிகடுகு பொடி ஆகியவற்றை வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.

ஆஸ்துமா நோய் குணமடைய வில்வ இலை பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர விரைவில் குணமாகும். வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு பின் வெதுவெதுப்பான நீரை பருகி வந்தால் ஆஸ்துமா நோய் குணமடையும்.

ஆஸ்துமா நோய் குணமடைய ஆடாதொடை இலை தேன் ஆகியவற்றை சாப்பிட்டு வர ஆஸ்துமா குறையும்.

பழைய மஞ்சள் துண்டு எடுத்து அதனை இடித்து பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் ஆஸ்துமா குணமடையும்.

சங்குப்பூ இலையை துவையல் செய்து சாப்பிட்டு வர ஆஸ்துமா தீரும்.

சிறிதளவு கொள்ளு எடுத்து அதனை இடித்து 200 மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் நீரானது 100 மில்லி லிட்டர் அளவாக வற்றி வந்தபின் அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமாவினால் ஏற்படும் இரப்பிருமல் குணமாகும்.ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம்!

கடுகு எண்ணெய்யுடன் கற்பூரத்தை நன்றாக கலந்து நெஞ்சில் தடவி வர சுவாசித்தல் எளிதாகி ஆஸ்துமா தீரும்.

இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ