Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

-

பொதுவாகவே பலரும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சில மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!அது பெரிய அளவிலான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணராமல் குழந்தைகளுக்கும் துரோகம் செய்து விடுகிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்களும் இது போன்ற தவறுகளை செய்கிறார்கள். பணத்திற்காக நம் உடலில் என்ன பிரச்சனை என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ளாமல் சில மருத்துவர்களும் சில ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரை செய்கிறார்கள். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அதாவது சாதாரண சளி, இருமல் போன்றவைகளுக்கு உடனே மெடிக்கலில் கிடைக்கும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இந்த ஆன்ட்டிபயாட்டிக் என்பது நம் உடலில் உற்பத்தியாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல பாக்டீரியாக்களையும் அழித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை குறைத்து விடுகிறது.ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் இன்று நமக்கோ நம் குழந்தைக்கோ காய்ச்சல், சளி, இருமல் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவர் நமக்கு மருந்து ஒன்றை பரிந்துரை செய்கிறார். ஆனால் அதே மருந்தை மீண்டும் சில மாதங்கள் கழித்து மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல், சளி போன்றவைகளுக்கு எடுத்துக் கொள்வது மிகவும் தவறானது. ஏனென்றால் அந்த பாக்டீரியாவானது இடைப்பட்ட நாட்களில் தன்னுடைய வடிவமைப்பை மாற்றி இருக்கும். எனவே அந்த மருந்து குறிப்பிட்ட பாக்டீரியாவை அழிக்காது. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!அதாவது அந்த மருந்து வேலை செய்யாது. ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் மீண்டும் உட்கொள்ளும் அந்த ஆன்டிபயாட்டிக் மருந்து உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது. இதன் விளைவாக வைரஸ் தொற்று, பூஞ்சை தொற்று போன்றவை எளிதில் நம்மை தாக்கி விடுகின்றன. அதன்படி வேறேனும் தொற்று நமக்கு ஏற்பட்டால் நல்ல பாக்டீரியாக்கள் அழிந்திருக்கும் நிலையில் அவற்றால் வைரஸ்களை எதிர்த்து போராட முடியாது.ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்!

மேலும் இந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்து வகைகள் நம் கல்லீரலையும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகையினால் காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு யோசிக்காமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக் கொள்வதை உடனடியாக தவிர்த்திடுங்கள். ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் அதுவே குணமாகிவிடும்.

இருந்த போதிலும் தீவிரமான காய்ச்சல், சளி, இருமல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது.

MUST READ