Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!

கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!

-

கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!

இன்றுள்ள காலகட்டத்தில் சீக்கிரமாகவே நம் கண்கள் பாதிப்படைந்து விடுகின்றன. பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் கூட இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கண் சம்பந்தமான நோய்கள் தாக்கி ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை கூட ஏற்படுகிறது. எனவே நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய முறைகளை பின்பற்றலாம்.கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!

புரத சத்துக்களும் கொழுப்புகளும் சால்மன் மீனில் அதிகம் காணப்படுகிறது. அதேசமயம் இதில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அஸ்டாக்சாந்தின் போன்றவை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது கண் சம்பந்தமான அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் காப்பாற்றுகிறது. அஸ்டாக்சாந்தின் இருக்கும் ட்ரவுட் அல்லது இறால்களை உட்கொள்வதன் நமக்கு சத்துக்கள் கிடைக்கிறது. இது கண்களுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!மேலும் பீட்டா கரோட்டின் நம் கண்களுக்கு நன்மை பயக்கக் கூடியது. நம் உடல் பீட்டா கரோட்டினை வைட்டமின் ஏயாக மாற்றுகிறது. இதனால் நம் கண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதேசமயம் கண்புரை, நீரழிவு ரெட்டினோபதி போன்றவற்றின் அபாயத்தை குறைக்க வழிவகை செய்கிறது. பீட்டா கரோட்டின், ஆரஞ்சு மற்றும் இனிப்பு வகை கிழங்குகளில் அதிகம் இருப்பதால் இது நம் கண்களுக்கு பயனுள்ளதாக விளங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!இருப்பினும் கண்களில் ஏதேனும் தொந்தரவு தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அதை சமயம் வருடத்திற்கு ஒரு முறையாவது நம் பார்வைத் திறனை சரி பார்த்துக் கொள்வது அவசியம்.

MUST READ