Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்கும் சில வழிகள்!

கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்கும் சில வழிகள்!

-

கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்கும் சில வழிகள்:

நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இதய நோய்கள், மாரடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே கொலஸ்ட்ராலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல் இருப்பதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்கும் சில வழிகள்!நம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற போன்றவை உள்ளன. இது ரத்தம் உறைவதை குறைப்பதற்கும் நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கும் பெரிதும் பயன்படுகிறது. அதன்படி ஐந்து முதல் ஆறு பூண்டுகளை தட்டி அரை டம்ளர் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்தப் பாலை தொடர்ந்து 12 வாரம் இரவு நேரங்களில் குடிக்க வேண்டும்.கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்கும் சில வழிகள்!

அடுத்தது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் திரிபலா, கொலஸ்ட்ராலை குறைக்கும் அருமருந்தாகும். இது ரத்தத்தை சீர்படுத்தவும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கவும் பயன்படுகிறது. இதனை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பிறகு ஒரு டம்ளர் மோரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு, துருவிய இஞ்சி சிறிதளவு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கி தினமும் குடித்து வர கொலஸ்ட்ரால் குறைவதை காணலாம்.கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாகவே குறைக்கும் சில வழிகள்!

மேலும் பார்லியில், கஞ்சி, சூப், ரொட்டி போன்றவை செய்து சாப்பிட்டு வர கொழுப்புகள் குறையும்.

இருப்பினும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.

MUST READ