Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கை, கால்களில் வளரும் முடிகளை நீக்க சில டிப்ஸ்!

கை, கால்களில் வளரும் முடிகளை நீக்க சில டிப்ஸ்!

-

- Advertisement -

கை, கால்களில் வளரும் முடிகளை நீக்க சில டிப்ஸ்!நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கை, கால்களில் தேவையற்ற முடிகள் வளர்வதனால் நாம் மார்க்கெட்டில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி அதை முடிகளை நீக்க பயன்படுத்தி வருகிறோம். இது தற்சமயம் பலனளித்தாலும் எதிர்காலத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. எனவே தான் தற்போது இயற்கையான முறையில் தேவையற்ற முடிகளை நீக்க சில டிப்ஸ்களை பின்பற்றுவோம்.

முதலில் சுத்தமான கஸ்தூரி மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் குப்பைமேனி இலைகளை பறித்து நன்கு கழுவி அதனை காய வைக்க வேண்டும். இப்போது இரண்டையும் தனித்தனியாக பவுடராக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கஸ்தூரி மஞ்சள், குப்பைமேனி இலை பவுடர் ஆகியவற்றை சம அளவில் எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த பேஸ்டை கை, கால்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து காட்டன் துணியினால் துடைத்து வர தேவையற்ற முடிகள் நீங்கும்.கை, கால்களில் வளரும் முடிகளை நீக்க சில டிப்ஸ்!

இதனை முகத்திலும் பயன்படுத்தலாம். அப்படி முகத்தில் பயன்படுத்தும் போது புருவ முடிகளில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் சிறிதளவு சர்க்கரை, சிறிதளவு தேன், சில சொட்டுகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதனை அடுப்பில் வைத்து மூன்று நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். பின் இந்தக் கலவை ஆறியதும் பசை போன்று மாறிவிடும். இதனை அப்படியே எடுத்து கை மற்றும் கால்களில் தடவி, பசை காய்ந்ததும் முடிகளின் எதிர் திசையை நோக்கி இழுக்க முடிகள் அகன்று விடும். இந்த டிப்ஸை பின்பற்றும்போது கவனமாக பின்பற்ற வேண்டும் ஏனெனில் இந்த டிப்ஸ் சிறிது வலியை உண்டாக்கும்.கை, கால்களில் வளரும் முடிகளை நீக்க சில டிப்ஸ்!

ஓட்ஸ் மற்றும் பழுத்த வாழைப்பழம் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து முடிகள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி வர தேவையற்ற முடிகள் அகன்று விடும்.

எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு சாறு, தேன் ஆகிய மூன்றையும் கலந்து முடிகள் உள்ள இடத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வர தேவையற்ற முடிகள் கொட்டிவிடும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ