எலும்புகளை பலப்படுத்த சில டிப்ஸ்!
நம் எலும்புகளை பலப்படுத்துவதற்கு கால்சியம் சத்துக்கள் மிகவும் அவசியம். நம்மில் பலருக்கு இளம் வயதிலேயே எலும்புகள் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. இதனால் முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இதற்கு முக்கிய காரணம் மிகக் குறைவான உடல் உழைப்பு தான். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை தினமும் பின்பற்றினால் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
தற்போது எலும்புகளை பலப்படுத்த சில உணவு முறைகளை பின்பற்றலாம்.
முதலில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள.
பின்னர் நெத்திலி, வஞ்சரம், கட்லா போன்ற மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆட்டுக்கால் சூப், நண்டு சூப் போன்றவைகளும் எலும்புகளை உறுதிப்படுத்த உதவுகிறது.
அதேபோன்று கொள்ளு ரசம் வைத்து குடிக்கலாம்.
அத்தி பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளும் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.
மேலும் ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் பழம், கொய்யாப்பழம் போன்றவைகளில் கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்பெற உதவி புரிகின்றன.
இந்த காய்கறி, பழங்கள் போன்றவற்றை சிறுவயதிலிருந்தே எடுத்துக் கொள்வதால் வருங்காலத்தில் எலும்புகள் பலவீனம் அடைவதை தவிர்க்கலாம்.
இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.