முகத்தில் தேவையற்ற கொழுப்புகள் சேருவதால் முகத்தில் சதை அதிகமாகி தொங்குவது போன்ற தோற்றமளிக்கும். அதேபோல் கழுத்துப்பகுதியும் பெரிதாகி இரட்டைத்தாடை இருப்பது போன்று தெரியும். இதனால் பார்ப்பவர்களுக்கு,
நம் முகம் அழகான வடிவில் தெரியாது. எனவே முகத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க சூப்பரான சில வழிகளை பார்க்கலாம்.
முதலில் முகத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க முறையான டயட் இருக்க வேண்டும். அதாவது கார்போஹைட்ரேட்டர்களை குறைத்து காய்கறி, பயறு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. ஆப்பிள் போன்ற பல வகைகளையும் சாப்பிட்டால் உடலுக்கு வலிமையும் ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும் எண்ணெய் சார்ந்த பொருட்களையும் அதிகமான இனிப்பு வகைகளையும் தவிர்ப்பது நல்லது. இது போன்ற டயட்டுகளை பின்பற்றினால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து நம் முகம் அழகான தோற்றமளிக்கும்.
அடுத்தது முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். முகத்தசைகளை அசைக்கும் பயிற்சிகள், மசாஜ்கள் செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்களும் குறைந்து கொழுப்புகளும் கரைந்து விடும்.
1. நாக்கினால் மூக்கை தொடுவது நல்ல முக பயிற்சியாகும்.
2. கழுத்தினை இடது பக்கமாக திருப்பி வாயின் கீழ் தாடையை முன்னும் பின்னும் அசைத்தால் முகத்தில் அதிகமாக இருக்கும் தசைகள் குறைய தொடங்கும்.
3. வாயின் கீழ் பகுதியை ஒன்னும் பிண்ணும் அசைத்தால் கொழுப்புகள் கரையும்.
இது போன்ற முகம் மசாஜ்களை 8 முதல் 10 முறை செய்யலாம். தினமும் செய்வது அவசியம்.
நிம்மதியான தூக்கம் வேண்டும். நாள் ஒன்றுக்கு 45 நிமிட நடைப்பயிற்சி செய்வது அவசியம்.
மேலும் நீர்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். மோர், இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை எடுத்துக்கொண்டால் உடல் எடை விரைவில் குறையும். தேவையற்ற கொழுப்புகளும் கரைந்து நல்ல ரிசல்ட் கிடைக்கும்.