Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!

முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!

-

முடக்கு வாதம் என்பது பொதுவாக மூட்டுகளை பாதிக்கும் ஒரு நாள்பட்ட அழற்சி நிலையாகும். இது ஒரு தன்னுடல் தாக்கு நோய். நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு எதிராக செயல்படுவது தான் முடக்கு வாதம். முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!பல்வேறு காரணங்களால் உண்டாகும் முடக்குவாதத்தை பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். வயதாகும்போது எலும்புகள் தேய்மானம் அடைவதால் முடக்கு வாதம் ஏற்படக்கூடும். அதேசமயம் மன அழுத்தத்தின் காரணமாகவும் இந்த பிரச்சனை உண்டாகும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் மிகவும் அதிகமாகும் சமயத்திலும் முடக்குவாதம் உண்டாகிறது. இது முதலில் காலின் பெருவிரலில் தொடங்கி மற்ற இடங்களில் பரவக்கூடியது. எனவே உடல் உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த முடக்கு வாதம் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதுபோன்று பெண்களுக்கு அவர்களது இறுதி மாதவிடாயின் போது முடக்கு வாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு முடக்கு வாதம் வெவ்வேறு காரணங்களால் உண்டாகிறது. இதை நபருக்கு நபர் மாறுபடக்கூடும்.

காலையில் எழுந்திருக்கும் போது மூட்டு வலி, மூட்டுகளில் வீக்கம், சோர்வு, காய்ச்சல், மார்பு வலி, எடை இழப்பு, பலவீனம், பசியின்மை, கழுத்தை திருப்ப முடியாமல் போவது போன்றவை முடக்குவாதத்தின் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.

தீர்வுகள்:முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!

சரவாங்கி என்று சொல்லப்படும் முடக்கு வாதத்திற்கு சில தீர்வுகளை பார்க்கலாம்.

முதலில் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் எலும்புகள் ஆரோக்கிய மேம்படும். குறிப்பாக பால், பால் சார்ந்த பொருட்கள், மீன் வகைகள், கீரை போன்றவைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பல வகைகளையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாதாம், வால்நட் போன்ற நச்சு வகைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.முடக்கு வாதத்தின் அறிகுறிகளும் அதன் தீர்வுகளும்!

பூண்டு என்பது முடக்குவாதத்திற்கு சிறந்த மருந்தாக சொல்லப்படுகிறது. எனவே தினமும் இரண்டு பூண்டு அளவு சாப்பிட்டாலே விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

செர்ரி பழத்தினால் முடக்குவாதம் கட்டுப்படுவதோடு இனி முடக்குவாதம் வராமலும் தடுக்கிறது.

இருப்பினும் முடக்கு வாதம் தொடர்பான அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஏனென்றால் மழைக்காலத்தில் இந்த முடக்கு வாதம் மோசமானதாக மாறக்கூடும்.

MUST READ