Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வெயில் காலத்தில் பனை நுங்கு தரும் நன்மைகள்!

வெயில் காலத்தில் பனை நுங்கு தரும் நன்மைகள்!

-

- Advertisement -

வெயில் காலத்தில் பனை நுங்கு தரும் நன்மைகள்!வெயில் காலங்களில் மிகவும் முக்கியமானது நுங்கு. இவை சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் அதிக மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அற்புத மருந்து தான் நுங்கு. நுங்கு உடல் சூட்டை தணித்து வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுக்கிறது. அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

பனை நுங்கு என்பது நம் உடலில் கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் திறனையும் கொண்டுள்ளது.

பனை நுங்கில் இருக்கும் நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டிற்குமே அருமருந்தாக பயன்படுகிறது.வெயில் காலத்தில் பனை நுங்கு தரும் நன்மைகள்!

உடல் உஷ்ணம் இருப்பவர்கள் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. ஆனால் பனை நுங்கை சாப்பிட்டால் அவர்களின் தாகம் அடங்கும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் சரியாகும். அதே சமயம் மலச்சிக்கல் அசிடிட்டி போன்றவைகளும் குணமாகும்.

நுங்கில் உள்ள அந்த்யூசைன் என்னும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

நுங்கினை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு, கொப்பளம் குடல் புண் போன்றவை குணமாகும்.வெயில் காலத்தில் பனை நுங்கு தரும் நன்மைகள்!

நுங்கு அதிகம் சாப்பிட்டு வர உடலில் நீர்ச்சத்து அதிகரித்து வெயிலினால் உண்டாகும் மயக்கம் குறையும்.

இம்முறையை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தலாம்.

MUST READ