Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒன்றே போதும்!

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒன்றே போதும்!

-

- Advertisement -

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒன்றே போதும்!நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அண்ணாச்சி பூ ஒன்றே போதும். தற்போது அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

முதலில் 100 கிராம் அளவு அண்ணாச்சி பூவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் 100 மில்லி லிட்டர் அளவு தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அண்ணாச்சி பூவை எடுத்து ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி பாட்டிலில் பொடி செய்த அண்ணாச்சி பூவை சேகரித்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் 100 மில்லி லிட்டர் தண்ணீரை ஊற்றி அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது அண்ணாச்சி பூவின் பொடியை 10 கிராம் அளவு எடுத்து அதை கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.

100 மில்லி லிட்டர் அளவு தண்ணீர் ஆனது 50 மில்லி லிட்டராக வற்றி வரும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.

நன்கு காய்ச்சிய பின் ஒரு பாத்திரத்தில் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வடிகட்டிய தண்ணீரை நாள்தோறும் காலை வேளையில் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது ஒன்றே போதும்!

இன்றுள்ள காலகட்டத்தில் நம் உணவு பழக்கங்களின் மாற்றத்தினால் பெரும்பாலானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதே கிடையாது. இதனால் பல நுண் கிருமிகள் தொற்று ஏற்பட்டு அதனால் பல வகையான நோய்களும் ஏற்படுவதுண்டு. எனவே இது போன்றவற்றை தவிர்க்க அண்ணாச்சி பூ குடிநீர் தயாரித்து பருகினால் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து நோய்களிலிருந்து விடுபடலாம்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ