Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!

ரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!

-

ரத்த ஓட்டம் என்பது நம் உடலுக்கு ஆதாரமாக விளங்குகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்சிஜனையும் உணவையும் ரத்தம் தான் கடத்திச் செல்கிறது. அதேசமயம் நோய் தொற்று ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்து தருவது ரத்தம் தான். எனவே ரத்தத்தில் நச்சுக்களும் கழிவுகளும் தேங்கினால் அது நம் உடலின் மொத்த செயல்பாட்டையும் பாதிப்படையச் செய்கிறது.ரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!

நம் ரத்தம் அசுத்தம் ஆவதற்கு எண்ணெயில் வறுக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், அதிக காரமுள்ள உணவுகள் போன்றவை காரணமாக அமைகிறது. அதேசமயம் ஒழுங்கற்ற உணவு பழக்கங்களினாலும், மதுப்பழக்கம் குடிப்பழக்கம் போன்றவைகளாலும் நம் ரத்தம் அசுத்தம் ஆகிறது.

எனவே ரத்தத்தை சுத்திகரிப்பதற்கு கொத்தமல்லி தழையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. இது கண் பார்வையையும் மூளையின் செயல் திறனையும் மேம்படுத்த உதவுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!மேலும் செரிமான கோளாறுகளை சரி செய்யவும் பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் கொத்தமல்லியை பச்சை வைரம் என்று அழைப்பர். இதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் ஒரு பெரிய நெல்லிக்காய், ஒரு மாதுளம் பழம், சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து ஜூஸாக பருகினால் நம் உடம்பில் ஓடும் ரத்தம் சுத்தம் ஆகும். இதனை ஒரு முறை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ