சீதாப்பழம் என்பது தனிப்பட்ட மணமும் சுவையும் உடையது. சீதா பழத்தின் விதை, இலை, மரப்பட்டை, தோல் ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. இதில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்பு சத்து, புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீதாப்பழத்தில் இவ்வளவு சத்துக்கள் அடங்கியிருப்பதால் தான் இதை மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக காணப்படுகிறது.
இப்போது சீதாப்பழத்தை பயன்படுத்தி பேன்களை எப்படி ஒழிக்கலாம் என்று பார்க்கலாம்.
முதலில் சீதாப்பழ விதைகளை காய வைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
அதே சமயம் சிறிய அளவில் வெந்தயம் மற்றும் சிறு பயிறு ஆகியவற்றை இரவில் ஊற வைக்க வேண்டும். அதனை காலையில் அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் சீதாப்பழ விதை பொடியை கலந்து தலையில் தேய்த்து 10லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின் தலையில் மசாஜ் செய்து குளித்து வர தலையானது குளிர்ச்சி பெறும். பேன்கள் ஒழியும். முடியும் உதிராமல் இருக்கும். இவ்வாறு செய்வதினால் பொடுகு தொல்லையும் இருக்காது.
இந்த ஒரு டிப்ஸை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றினாலே பேன்கள் முற்றிலும் ஒழிந்து விடும்.
இருந்த போதிலும் இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.