இன்றைய காலகட்டத்தில் ஆண் – பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனையாக இருப்பது முடி உதிர்தல். அதாவது உணவு பழக்கவழக்கங்களின் மாறுபாட்டாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே கறிவேப்பிலை, புரதச்சத்து நிறைந்த உணவுகள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் முடி உதிர்தல் பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். இது தவிர பஞ்ச கற்ப தைலத்தையும் பயன்படுத்தினால் முடி வளர்ச்சி அதிகமாகுமாம். தற்போது பஞ்ச கற்ப தைலம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
பஞ்ச கற்ப தைலம் செய்ய தேவையான பொருள்கள்:
கடுக்காய் – 50 கிராம்
வேப்பிலை – சிறிதளவு
வெள்ளை மிளகு – 1/4 ஸ்பூன்
கரிசலாங்கண்ணி சாறு – 10 கிராம்
நல்லெண்ணெய் – அரை லிட்டர்
செய்முறை:
முதலில் கடுக்காயை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, கரிசலாங்கண்ணி சாறு ஆகியவற்றை நல்லெண்ணையில் கலந்து மிதமான தீயில் காய்ச்சி எடுத்து அதனை அப்படியே ஆற வைக்க வேண்டும். அதாவது ஒரு நாள் இரவு முழுக்க அப்படியே வைத்து விட வேண்டும். மறுநாள் அதை வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த தைலத்தை குளிக்கும்போது மிதமாக சூடு செய்து தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தைலம் ஊறிய பின் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இந்த தைலத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.
இருப்பினும் இதை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.