Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த சண்டே ஆப்பிள் தேங்காய் பர்பி செஞ்சு பாருங்க!

இந்த சண்டே ஆப்பிள் தேங்காய் பர்பி செஞ்சு பாருங்க!

-

ஆப்பிள் தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள்:இந்த சண்டே ஆப்பிள் தேங்காய் பர்பி செஞ்சு பாருங்க!

ஆப்பிள் – 1
தேங்காய் துருவல் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
ஏலக்காய் – 2
பாதாம் – 10
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
பிஸ்தா – 10
பால் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

ஆப்பிள் தேங்காய் பர்பி செய்ய முதலில் ஆப்பிளை தோல் நீக்கி சீவி வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இரண்டு ஸ்பூன் அளவு பாலில் குங்குமப்பூவை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த சண்டே ஆப்பிள் தேங்காய் பர்பி செஞ்சு பாருங்க!

இப்போது ஒரு கடாயில் சீவி வைத்திருக்கும் ஆப்பிள், துருவிய தேங்காய், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.

அதன் பின்னர் அதில் ஏலக்காய் பொடி பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். மேலும் குங்குமப்பூ பாலை சேர்த்து கிளற வேண்டும்.

இந்த கலவையானது நீர் தன்மை இல்லாமல் வரும் அளவிற்கு நன்கு கலக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

அடுத்ததாக இரண்டு ஸ்பூன் அளவு நெய்யை ஒரு அகன்ற தட்டில் ஊற்றி தடவ வேண்டும். இப்போது தயார் செய்து வைத்துள்ள கலவையை அந்த தட்டில் ஊற்றி சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். தட்டை கரண்டியை கொண்டு அமுக்கி பரப்பி விட்டால் இன்னும் நல்லது.இந்த சண்டே ஆப்பிள் தேங்காய் பர்பி செஞ்சு பாருங்க!

இதனை விருப்பமான வடிவத்தில் வெட்டி இரண்டு மணி நேரங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.

இரண்டு மணி நேரங்களுக்கு பின்னர் ஆப்பிள் தேங்காய் பர்பி தயாராகிவிடும். அதன் மேல் பொடிப்பொடியாக நறுக்கி வைத்திருக்கும் நட்ஸ் வகைகளை சேர்த்து பரிமாறலாம். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ