இரவில் சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாதாம். இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி அறிவோம்.
அதாவது பெரும்பாலானவர்கள் இரவில் சாப்பிட்ட உடன் தூங்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றனர். பொதுவாக சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால் சாப்பிட்டதும் தூங்குவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் சிலருக்கு சாப்பிட்டவுடன் சோர்வாக இருப்பது பொதுவானது. அதாவது உணவுக்கு பின்னர் உடலானது ஹார்மோன்களை வெளியிடும். உணவானது செரிமானம் அடைய குடல் பாதைக்கு அதிக ரத்தத்தை விநியோகம் செய்யும். எனவே மூளை சற்று மெதுவாக வேலை செய்ய தொடங்கும். இதன் காரணமாகவே சாப்பிட்டவுடன் தூக்கம் வருகின்றன. ஆனால் அது பகலாக இருந்தாலும் சரி இரவாக இருந்தாலும் சரி சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. அதற்கு பதிலாக நடை பயிற்சி செய்யலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். சாப்பிட்டவுடன் தூங்குவது உடல் பருமன், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். எனவே இரவில் சாப்பிட்டதும் இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு படுக்கைக்கு செல்ல வேண்டும். மேலும் சாப்பிட்டவுடன் தூங்க செல்பவர்கள் தாமதமாக உணவை சாப்பிடாமல் மாலை 7 மணிக்குள் இரவு உணவை எடுத்துக்கொண்டு 10 மணிக்குள் தூங்க செல்வது நல்லது. அத்துடன் சாப்பிட்டவுடன் புகைப்பிடிப்பதும் உடலின் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். மருத்துவரின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுங்கள்.