Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் துவரம் பருப்பு!

சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் துவரம் பருப்பு!

-

- Advertisement -

தமிழர்களின் சமையல் பொருட்களில் துவரம் பருப்பு முக்கியமான இடத்தை பிடித்திருக்கும். அந்த அளவிற்கு துவரம் பருப்பு என்பது முக்கிய உணவுப் பொருளாகும். துவரம் பருப்பில் அதிக அளவில் புரோட்டின் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே.சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் துவரம் பருப்பு! அதேசமயம் இதில் போலிக் ஆசிட், நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளது. துவரம் பருப்பானது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்து தரக்கூடியது. நீரிழிவு நோயாளிகள் கூட துவரம் பருப்புகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் துவரம் பருப்பு!குறிப்பாக உடல் மெலிந்து காணப்படும் குழந்தைகளுக்கு உடலை தேற்ற துவரம் பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பலனளிக்கும். அத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செரிமான சக்தியை அதிகரித்து உடலுக்கு பலம் தரும். இந்த துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வாக விளங்குகிறது. மேலும் இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை அதிகரிக்க விடாமல் தடுக்கும். மேலும் இது சிறுநீரக கற்களை வெளியேற்றி சிறுநீரகப் பாதை தொற்றுகளை நீக்கும் தன்மையுடையது.சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவும் துவரம் பருப்பு!

எனவே துவரம் பருப்பினை ஒதுக்காமல் அதனை அதனை துவையலாகவோ, கூட்டாகவோ, குழம்பாகவோ செய்து அடிக்கடி அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ