Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆரோக்கியமான கம்பு இட்லி செய்து பாருங்கள்!

ஆரோக்கியமான கம்பு இட்லி செய்து பாருங்கள்!

-

கம்பு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

கம்பு – ஒரு கப்
பச்சரிசி – ஒரு கப்
உளுந்து – ஒரு கைப்பிடி அளவு
வெந்தயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவுஆரோக்கியமான கம்பு இட்லி செய்து பாருங்கள்!

செய்முறை:

கம்பு இட்லி செய்வதற்கு முதலில், கம்பு ,பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

அதன் பின் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலக்கி மாவினை புளிக்க வைக்க வேண்டும்.

கம்பு மாவு, மற்ற மாவுகளை ஒப்பிடுகையில் விரைவில் புளித்து விடும். எனவே இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாவு புளித்து பொங்கி விடுகிறதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

புளித்த மாவை இட்லி தட்டில் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து அடுப்பினை அணைத்து இட்லியை எடுக்க வேண்டும்.

இப்போது ஆரோக்கியமான சுவையான கம்பு இட்லி தயார். கம்பு மாவில் தோசை சுட்டும் சாப்பிடலாம். இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை சிறந்த சைடிஷ் ஆகும். ஆரோக்கியமான கம்பு இட்லி செய்து பாருங்கள்!

கம்பு என்பது உடல் ஆரோக்கியத்திற்காக நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் புரதச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. மேலும் இது உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. ரத்த சோகை உள்ளவர்கள் கம்பு இட்லி அல்லது தோசை செய்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

MUST READ