Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பிரேக் ஃபாஸ்ட்டுக்கு ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க!

பிரேக் ஃபாஸ்ட்டுக்கு ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க!

-

டோக்ளா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

பிரேக் ஃபாஸ்ட்டுக்கு ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க!

கடலை மாவு – 2 கப்
புளித்த தயிர் – 1 1/2 கப்
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
துருவிய இஞ்சி – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
சோடா உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

டோக்ளா செய்ய முதலில் கொத்தமல்லி இஞ்சி பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் கடலை மாவை புளித்த தயிரில் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். கடலை மாவு நன்கு கரைந்த பின் உப்பு, மிளகாய்த்தூள், சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.

பின் எண்ணை தடவிய தட்டில் இந்த கலவையை சேர்த்து 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்க வேண்டும்.

அதன் பின் சிறிது நேரம் ஆற வைத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.பிரேக் ஃபாஸ்ட்டுக்கு ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க!

பின் ஒரு அகன்ற கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். சிறிதளவு பெருங்காயத் துளையும் சேர்த்து கிளற வேண்டும்.பின் கடலை மாவு துண்டுகளில் தாளித்ததையும், தேங்காய் துருவல், கொத்தமல்லி போன்றவற்றையும் சேர்த்து விட வேண்டும்.
இப்போது டோக்ளா தயாராகிவிட்டது. இதனை தேங்காய் சட்னி மற்றும் காரச் சட்னி உடன் பரிமாறலாம்.

MUST READ