உடல் எடையை குறைப்பதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது. துரித உணவு சாப்பிடுவதற்கு பதிலாக ஓட்ஸ் சாப்பிடுவதனால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேரும். ஓட்ஸ் என்பது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.
தற்போது ஓட்ஸ் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
ஓட்ஸ் – 2 கப்
கோதுமை மாவு – அரை கப்
அரிசி மாவு – அரை கப்
ரவை – அரை கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சமையல் சோடா – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
ஓட்ஸ் தோசை செய்ய முதலில் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய், இஞ்சி, கறிவப்பிலை ஆகியவற்றை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஓட்ஸ், கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை ஆகியவற்றை ஒரு முறை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனை உப்பு , சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன்பின் தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து மெல்லியதாக மாவை ஊற்றி இருபுறமும் மாவு வெந்து வரும் வரை தோசையை பிரட்டி விட வேண்டும்.
இப்போது ஓட்ஸ் தோசை ரெடி.