Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் குளிர்ச்சிக்கு அன்னாசிப்பழ மோர் குழம்பு செஞ்சு பாருங்க!

உடல் குளிர்ச்சிக்கு அன்னாசிப்பழ மோர் குழம்பு செஞ்சு பாருங்க!

-

அன்னாசிப்பழ மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:உடல் குளிர்ச்சிக்கு அன்னாசிப்பழ மோர் குழம்பு செஞ்சு பாருங்க!

அன்னாசிப்பழ துண்டுகள் – 5 முதல் 8
(பெரிய துண்டுகளாக இருந்தால் 8 வரைக்கும் எடுத்துக் கொள்ளலாம். சின்ன துண்டுகள் என்றால் பத்து எடுத்துக் கொள்ளலாம்)
தயிர் – 2 கப்
துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்
தேங்காய் – அரை கப்
அரிசி – ஒரு ஸ்பூன்
வரமிளகாய் – 5
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கடுகு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அன்னாசிப்பழ மோர் குழம்பு செய்ய முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின்னர் அன்னாசிப்பழ துண்டுகளை சேர்த்து வதக்கி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு (1 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.உடல் குளிர்ச்சிக்கு அன்னாசிப்பழ மோர் குழம்பு செஞ்சு பாருங்க!

அதேசமயம் மிக்ஸி ஜாரில் அரிசி, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்நாளில் தயிர் சேர்த்து அரைக்க வேண்டும்.

இப்போது அன்னாசிப்பழ துண்டுகள் சேர்த்து தாளித்த வாணலியில் அதைக் கொட்டி அடுப்பினை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

இதுபோன்ற பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தயிர் திரைந்து வராது.உடல் குளிர்ச்சிக்கு அன்னாசிப்பழ மோர் குழம்பு செஞ்சு பாருங்க!

அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வர மிளகாய் சேர்த்து தாளித்து மோர் குழம்பில் சேர்த்து விட வேண்டும். இப்போது அருமையான அன்னாசி பழ மோர் குழம்பு தயார்.

MUST READ