ஓட்ஸ் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 2 கப்
பாசி பருப்பு – 3/4 கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
முந்திரி பருப்பு – 10
இஞ்சி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
ஓட்ஸ் பொங்கல் செய்யும் முறை:
ஓட்ஸ் பொங்கல் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் குக்கரில் பாசிப்பருப்பு சேர்த்து 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து பாசிப்பருப்பினை வேக வைக்க வேண்டும்.
பின் பருப்பு முக்கால் பாகம் வெந்த பிறகு அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் எடுத்து வைத்துள்ள ஓட்ஸ் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து கிளறி குக்கரை மூடி விட வேண்டும்.
மிதமான தீயில் வைத்து 4 விசில் வரும் வரை வேக விட வேண்டும். சிறிது நேரம் கழித்து ஓட்ஸ் நன்கு குழைந்து வந்துள்ளதா? என்பதை பார்த்து அடுப்பினை அணைத்து விட வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, நெய் காய்ந்ததும் அதில் மிளகு, சீரகம், முந்திரி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். அதேசமயம் இஞ்சியை இடித்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி வாசனை போன பின் அடுப்பை அணைத்துவிட்டு, தாளித்ததை பொங்கலில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
இப்போது சூப்பரான ஓட்ஸ் பொங்கல் தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதற்கு சட்னி மற்றும் சாம்பார் பொருத்தமான சைடிஷாக இருக்கும்.