தேங்காய் எண்ணெய் என்பது ஒரு அமிர்தமாக கருதப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைப் பற்றிய பல விஷயங்கள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. தேங்காய் எண்ணெய்யில் நிறைய சத்துக்களும் மருத்துவ பயன்களும் இருக்கின்றன. தேங்காய் எண்ணெயை பல்வேறு முறைகளில் பல்வேறு விதமாக பயன்படுத்தலாம். அதில் சிலவற்றை நாம் காண்போம்.
1. தேங்காய் எண்ணெய்யில் சிறிது சுத்தமான, எந்த ஒரு கலப்படமும் இல்லாத மஞ்சள் தூளை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி முகத்தில் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள கிருமிகள் நீங்கும் அதுமட்டுமில்லாமல் அம்மை தழும்பு ஏதேனும் இருந்தால் அவற்றையும் நீக்க இந்த முறையை பயன்படுத்தலாம்.
2. தேங்காய் எண்ணெய்யை சிறிதளவு எடுத்து காலை எழுந்தவுடன் வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். மேலும் பற்களில் இருக்கும் மஞ்சள் படலத்தின் அளவுகளையும், ஈறு சம்பந்தமான நோய்களையும் குறைக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.
3. முழங்கை கருப்பாகவும் சொரசொரப்பாகவும் இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து தடவி வந்தால் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
4. கைகளில் சுருக்கம் வராமல் தடுப்பதற்கும் இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தினமும் தேங்காய் எண்ணெயை கைகளிலும் கால்களிலும் தேய்த்து வந்தால் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
5. குளிக்கும் நீரில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு குளிப்பதனால் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கலாம்.
6. இரண்டு ஸ்பூன் அளவுக்கு கடலை மாவு எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து, இரண்டு ஸ்பூன் அளவில் தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும் பகுதிகளில் தேய்த்து கழுவி வந்தால் கருவளையம் மறையும்.
7. பெண்களுக்கு முடி கருகருவெனவும் அடர்த்தியாகவும் வளர இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.