Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஜலதோஷத்திற்கு நிவாரணம் அளிக்கும் வெற்றிலை!

ஜலதோஷத்திற்கு நிவாரணம் அளிக்கும் வெற்றிலை!

-

ஜலதோஷத்திற்கு நிவாரணம் அளிக்கும் வெற்றிலை!வெற்றிலையில் பொதுவாக சளி, இருமல் போன்றவற்றுக்கு தீர்வளிக்கும் குணம் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றிலை சளி, இருமலுக்கு மட்டுமல்லாமல் மேலும் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா போன்றவற்றை குணப்படுத்த இந்த வெற்றிலை பயன்படுகிறது.

தற்போது வெற்றிலையை எப்படி பயன்படுத்தினால் ஜலதோஷம், சளி, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

1. வெற்றிலையை ரசம் வைத்து சாப்பிடுவதனால் மூச்சு விடுதல் போன்ற பிரச்சனையை சரி செய்யலாம். இரண்டு வெற்றிலைகளை எடுத்து காம்பினை கிள்ளி, நடுவில் இருக்கும் நரம்பு பகுதிகளையும் நீக்கிவிட்டு இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளுடன் அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் லவங்க தூள் சேர்த்து அரைத்து, ஒரு டம்ளர் அளவில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரானது அரை டம்ளராக வரும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின் வடிகட்டி அதனை வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வர மூச்சு விடுதல் பிரச்சனையை சரி செய்யலாம்.ஜலதோஷத்திற்கு நிவாரணம் அளிக்கும் வெற்றிலை!

2. குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சு சளியை குறைக்க, இரண்டு வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு கடுகு எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ள வேண்டும். பின் தாங்குகிற அளவு சூடு வந்ததும் குழந்தைகளின் நெஞ்சில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து விடவும். இவ்வாறு தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர நெஞ்சு சளி குறைய தொடங்கும்.

3. சளி, இருமல் சமயங்களில் ஒரு வெற்றிலையை எடுத்து அதனுடன் ஐந்து மிளகு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கல் உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். இரவு நேரங்களில் உணவு சாப்பிட்ட பின் இதனை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறந்தது.ஜலதோஷத்திற்கு நிவாரணம் அளிக்கும் வெற்றிலை!

4. மூன்று வெற்றிலைகளை எடுத்து காம்பு பகுதிகளை நீக்கிவிட்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு துண்டு இஞ்சி, கால் டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி வெற்றிலை சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மிளகுத்தூள் கலந்து இதனை பருக வேண்டும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதுமானது. அதிகமாகவும் குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் இந்த வெற்றிலை சாற்றில் நாட்டு சக்கரை அல்லது வெல்லம் சேர்த்து பருகலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் நெஞ்சில் இருக்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேறிவிடும்.

இந்த முறைகளை ஒருமுறை செய்து பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை எனில் தேவைப்படும் செயல்களை பயன்படுத்தலாம். இல்லையேல் மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ