தசைகள் மற்றும் வலுவான எலும்புகளை உருவாக்க சைவ உணவு உண்பவர்களுக்கு 6 இந்திய வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்
விலையுயர்ந்த சிக்கன், மட்டன் சாப்பிடாதவர்கள் என்றால், இந்த 6 மலிவான பொருட்களை சாப்பிடுங்கள். இவற்றில் உள்ள வைட்டமின் பி 12 பலவீனமான உடம்பைக் கொண்டவர்களையும் வலிமையானவர்களாக்கும்.
வைட்டமின் பி 12 உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்து. இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இரத்தம், நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைக்கிறது. இரத்த சோகையைத் தடுக்கவும் இது உதவியாக இருக்கும்.
19 முதல் 64 வயதுடைய பெரியவர்களுக்கு தினமும் 1.5 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. போதுமான வைட்டமின் பி 12 கிடைக்கவில்லை என்றால், நீங்கள் சோர்வு, பலவீனம், மூச்சுத் திணறல் மற்றும் தலைவலி, மஞ்சள் காமாலை, கை- கால்களில் கூச்ச உணர்வு, அல்லது உணர்வின்மை, நினைவாற்றல், கவனம் இழப்பு போன்ற அறிகுறிகளை உருவாக்கலாம்.
வைட்டமின் பி-12 ஊட்டச்சத்து பொதுவாக விலங்கு பொருட்களில் ஏராளமாக காணப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணரும், உணவியல் நிபுணருமான ஷிகா அகர்வால் ஷர்மா, இந்தியாவில் வைட்டமின் பி12க்கு சிறந்த உணவுகள் எவை என்று கூறுகிறார்.
சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி12 ன் எளிதான, சத்தான மற்றும் சுவையான ஆதாரம் பால். சுமார் 250 மிலி பசுவின் பால் உங்கள் தினசரி வைட்டமின் பி12 தேவையில் பாதியை பூர்த்தி செய்யும். மற்றொன்று பாலாடைக்கட்டி. குறிப்பாக சுவிஸ் சீஸ். இதில் 50 கிராமில் சுமார் 1.5 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது.
பால் செரிமானமாவதில் சிரமம் இருந்தால், தயிர் ஒரு நல்ல வழி. உங்கள் தினசரி வைட்டமின் பி12 தேவையில் 16% 170 கிராம் குறைந்த கொழுப்புள்ள வெற்று தயிரில் இருந்து பெறலாம். உங்கள் உடலின் பி 12 தேவைகளைப் பூர்த்தி செய்ய பலப்படுத்தப்பட்ட தானியங்களுடன் தயிரை சேர்த்து சாப்பிடலாம்.
சைவ உணவில் வைட்டமின் பி12க்கான மற்றொரு சிறந்த வழி பனீர். இதன் மூலம் தினசரி தேவையில் குறைந்தது 20% பூர்த்தி செய்ய முடியும். உதாரணமாக, 100 கிராம் பாலாடைக்கட்டியில் சுமார் 0.8 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது, இது ஒரு வயது வந்தவருக்குத் தேவையான மூன்றில் ஒரு பங்காகும்.
நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், செறிவூட்டப்பட்ட உணவுகள், தாவரப் சூப்புகள் வைட்டமின் பி12க்கு சிறந்த தேர்வாகும். தவிடு, முழு கோதுமை, ஓட்ஸ் போன்ற வலுவூட்டப்பட்ட தானியங்களில் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. செறிவூட்டப்பட்ட பாதாம் பாலையும் உட்கொள்ளலாம். ஒரு கப் பாதாம் பாலில் சுமார் 2.1 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 உள்ளது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
மோர் உங்கள் புரத தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், இது வைட்டமின் பி 12 ஐ சிறிய அளவில் கொடுக்கிறது. 23 கிராம் மோரில் உங்கள் தினசரி வைட்டமின் பி 12 தேவைகளில் 5% வழங்குகிறது. மோர் புரோட்டீன் ஷேக்கை பால் அல்லது தயிர் கலந்து எடுத்துக் கொண்டால், அது வைட்டமின் பி12 ன் சிறந்த ஆதாரமாக மாறும்.
சைவ உணவு உண்பவர்களுக்கு ஷிடேக் காளான் வைட்டமின் பி12 ன் நல்ல சாய்ஸ் ஆகும். ஆனால் இதில் அதிக அளவு வைட்டமின் பி 12 இல்லை. எனவே அதை முழுமையாக சார்ந்து இருக்க வேண்டாம். சீஸ் உடன் காளான்களை கலந்து சாலட் அல்லது காய்கறி தயாரிக்கலாம். இது உங்கள் தினசரி வைட்டமின் பி12 தேவையை பூர்த்தி செய்யும்.