இதயம் என்பது மனிதனின் வாழ்நாள் முழுவதும் இயங்கக் கூடிய உறுப்பு. மனிதனின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை விநியோகிப்பதே இதயத்தின் முக்கிய பணியாகும். இதயத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தால் மனிதனின் ஆயுட்காலம் குறைந்து விடுகின்றன. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனிதன் உயிருடன் வாழ முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் இதயத்தை பாதுகாக்க சில விஷயங்களை நாம் கட்டாயம் செய்ய வேண்டும். அவற்றை நாம் இப்போது பார்க்கலாம்.
1. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று கூறுவார்கள். ஏனெனில் ஆப்பிள்களில் அதிகமான வைட்டமின்களும் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கின்றன. இவை ரத்த அழுத்தத்தை குறைத்து இதயம் சம்பந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கின்றன.
2. அடுத்ததாக உடலில் இருக்கும் கொழுப்பு சத்துக்களை குறைத்தால் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். அதற்காக நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
3. மாதுளம் பழங்களை சாப்பிட வேண்டும். இதில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் இருக்கின்றன.
4. பாதாம் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
5. பருப்பு மற்றும் பயிறு வகைகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் சேர்த்துக் கொள்வதால் இதயத்தை பாதுகாக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் உடலுக்கு தேவையான புரத சத்துக்களும் இதில் நிறைந்து காணப்படுகின்றன.
5. வெள்ளைப் பூண்டு சாப்பிடுவதால் ரத்தக்குழாய் தூய்மை அடைந்து ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இந்த பூண்டானது ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை தடுப்பது மட்டுமல்லாமல் இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
6. மேலும் வெண்டைக்காய், பீட்ரூட், கேரட், பீன்ஸ், புடலங்காய், வெண்பூசணி போன்ற காய்கறிகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இவை இதய நோய்கள் ஏற்படாமல் தடுத்து இதயத்தை பாதுகாக்க உதவுகின்றன.