பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுண்டு. வயதானாலும் கூட நம் தோற்றம் மாறக்கூடாது என்று அனைவரும் நினைக்கிறோம். நம் முன்னோர்கள் பலரும் பல காலங்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள் தான். அதற்குக் காரணம் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள்.
1. முதலில் நம் உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பின் அளவு நம் உடலில் அதிகமாகும் போது உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் குறைய ஆரம்பிக்கின்றன. அப்போது தோலில் சுருக்கங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
2. அடுத்தபடியாக இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு இனிப்பு சுவை அதிகமாகும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அதனால் பல நோய்கள் ஏற்படுவதால் உடலின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது.
3. மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். அதற்காக யோகாசனம் போன்ற சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டால் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம்.
4. நிம்மதியான தூக்கம் வேண்டும். தூக்கம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
5. புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
6. வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் இ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தாலே நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம்.