Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பற்களை பராமரிக்கும் வழிமுறைகள்!

பற்களை பராமரிக்கும் வழிமுறைகள்!

-

பற்களை பராமரிக்கும் வழிமுறைகள்!பற்களின் மீது படிந்துள்ள மஞ்சள் கறைகளை நீக்க, பல் வலிமை பெற, பல் வலியை குணப்படுத்த, பற்களில் நீங்க ஆகியவற்றுக்கான வழிமுறைகளை தற்போது பார்க்கலாம்.

1. வெண்மையான பற்கள் பெறுவதற்கு இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று சாப்பிட வேண்டும். இதனால் பற்கள் உறுதியுடன் இருப்பது மட்டுமல்லாமல் வெண்மையாகவும் மாறும்.

2. பற்களில் உள்ள கறைகள் நீங்க, சிறிதளவு எலுமிச்சம் பழம் சாற்றில் உப்பு கலந்து அதனை பற்களில் தேய்த்து வர ஈறுகள் பலம் பெறுவது மட்டுமல்லாமல் கறைகளும் மறையும்.

3. பல் வலியை தடுப்பதற்கு கொய்யா பழ இலைகளை வாயில் போட்டு மெல்ல வேண்டும். கொய்யா இலையில் ஆன்ட்டி மைக்ரோபியல் போன்ற எதிர்ப்பு பொருள் உள்ளது.

4. பல் ஈறுகள் பலமடைய, கொய்யாப்பழ இலைகளுடன் சிறிது உப்பு சிறிது புளி சேர்த்து வெற்றிலைப் போல் மடித்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.பற்களை பராமரிக்கும் வழிமுறைகள்!

5. பல் வலி அதிகமாக இருந்தால் அதனை உடனடியாக சரி செய்ய கிராம்பு ஒன்றினை எடுத்து வலி உள்ள பல்லின் மேல் வைத்து கடித்துக் கொண்டு இருக்க வேண்டும். கிராம்பு மருத்துவ குணம் நிறைந்தவை என்பதால் பல் வலி குறைய ஆரம்பிக்கும்.

6. பற்களின் மேல் உள்ள மஞ்சள் படலம் நீங்க சிறிதளவு பேக்கிங் சோடாவை தொட்டு பல் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை எனில் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ