Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பாலில் இஞ்சி சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

பாலில் இஞ்சி சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

-

- Advertisement -

பாலில் இஞ்சி சேர்த்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்.

இஞ்சி என்பது எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு சமையல் பொருள். அதாவது இஞ்சியை நாம் குடிக்கும் டீயிலிருந்து பிரியாணி வரைக்கும் பயன்படுத்துகிறோம். இஞ்சி என்பது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாலில் இஞ்சி சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?அதன்படி தலைவலி, வாந்தி, குமட்டல் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது ஆரோக்கியமான செரிமானத்தையும் ஊக்குவிக்கின்றன. இந்நிலையில் இஞ்சியை பாலில் சேர்த்து குடிப்பதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

தினமும் காலையில் எழுந்தவுடன் பாலில் இஞ்சி தட்டி போட்டு கொதிக்க விட்டு அதை வடிகட்டி குடிப்பதனால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. அதாவது நுரையீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு இந்த இஞ்சி கலந்த பால் பயன்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த இஞ்சி பாலானது நுரையீரலை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

அடுத்தது தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இஞ்சி பால் குடித்து வர பெண்களுக்கு சினைப்பையில் உண்டாகும் புற்றுநோய் கட்டிகள் ஏற்படாமல் தடுக்கலாம்.பாலில் இஞ்சி சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

குறிப்பாக இந்த இஞ்சி பாலானது உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இந்த இஞ்சி பால் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கும் பயன்படுகிறது. இருப்பினும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்ட பிறகு இதனை பின்பற்றுதல் நல்லது.

குறிப்பு:

அல்சர், மூலம், வாய்ப்புண் கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கக்கூடியவர்கள் இஞ்சி பால் குடிப்பதை தவிர்க்கவும்.

MUST READ