Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?

எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?

-

எண்ணெய் தேய்த்து குளிப்பதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அந்தப் பழக்கமே கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது என்று சொல்வதை விட மறந்து போய்விட்டோம் என்றும் சொல்லலாம். இப்போதெல்லாம் தீபாவளிக்கு மட்டும் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம். அதுவும் பத்தில் ஐந்து பேர் தான் எண்ணெய் குளியல் எடுக்கிறார்கள்.எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?

இப்போது எண்ணெய் குளியலையும் அதன் நன்மைகளையும் பற்றி தெரிந்து கொண்டு மறைந்து போன அந்த பழக்கத்தை நம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுப்போம்.

முதலில் எண்ணெய் குளியலுக்கு சிறந்த எண்ணெய் நல்லெண்ணெய். அது தவிர தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். அல்லது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்தும் பயன்படுத்தலாம்.எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?

எண்ணெய் குளியல் என்பது ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் கோடை காலம் என்றால் வாரத்திற்கு இரண்டு முறையும் மழைக்காலம் என்றால் வாரத்திற்கு ஒரு முறையும் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக தலையில் மட்டும் எண்ணெய் தேய்க்காமல் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்காமல் தண்ணீரை நன்கு சூடாக்கி வெதுவெதுப்பான நீரில் குளிப்பது தான் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை தான் சித்த மருத்துவமும் கூறுகிறது.எண்ணெய் குளியலால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன?

அடுத்ததாக சளி பிடிக்காமல் தவிர்க்க எண்ணெய் லேசான தீயில் சூடாக்கி பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் நாம் பயன்படுத்தும் எண்ணையில் ஒரு சிட்டிகை மிளகுத் தூள், ஒரு பூண்டு பல், ஒரு சிட்டிகை சுக்கு தூள் ஆகியவற்றை லேசாக சூடாக்கி அதனை பயன்படுத்தலாம்.

மற்றொரு குறிப்பு என்னவென்றால் தலையில் தேய்த்த எண்ணையை உடம்புக்கும் தேய்ப்பது நல்லதல்ல. ஏனென்றால் தலையில் உள்ள அழுக்குகள் உடம்பில் மற்ற பாகங்களுக்கும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே எடுத்து வைத்துள்ள எண்ணெய் இரண்டாகப் பிரித்து தலைக்கும் உடம்புக்கும் தனித்தனியே தேய்ப்பது சிறந்தது.

இவ்வாறு எண்ணெய் குளியலை பின்பற்றினால் உடல் சூடு தணிந்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். அதேசமயம் கண் பிரச்சனையும் தீரும்.

இருப்பினும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு எண்ணெய் குளியலை எடுத்துக் கொள்ளுங்கள்.

MUST READ