Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

-

- Advertisement -
kadalkanni

ஆவாரம் பூ ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. மனிதனை நோய் ஏற்படாமல் பாதுகாக்க இந்த ஆவாரம் பூ உதவுகிறது. தற்போதுள்ள காலகட்டங்களில் பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவற்றை தடுப்பதற்கு இந்த ஆவாரம் பூ உதவுகிறது.

ஆவாரம் பூவினை எப்படி, எந்தெந்த முறைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

1. நீரில் ஆவாரம் பூக்கள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை வடிகட்டி, குடிநீராக பருகி வந்தால் உடல் சூடு, பித்த அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போக்கு போன்றவை குணமடையும்.

2. மேலும் குடற்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றையும் இந்த ஆவாரம் பூ குடிநீர் சரி செய்யும்.

3. மேனிக்கு தங்க நிறத்தை கொடுக்கும் தங்க நிற பூவும் இந்த ஆவாரம் பூ தான். ஆவாரம் பூவை பொடி செய்து தேய்த்து குளித்து வந்தால் சருமம் மினுமினுப்பாக இருக்கும்.

4. ஆவாரம் பூவை காயவைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பொடியை நீரில் கலந்து கொதிக்க விட்டு பருகி வரலாம். இது ஒரு சிறந்த மூலிகை குடிநீர் ஆகும்.

5. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை ஆவாரம் பூவிற்கு இருக்கிறது. ஆவாரம் பூ குடிநீரை தொடர்ந்து பருகுவதனால் நல்ல பலன் கிடைக்கும்.

6. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் அகற்றவும் இது உதவுகிறது.ஆவாரம் பூவின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

7. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த ஆவாரம் பூ முழுமையாக நீக்கிவிடும்.

ஆவாரம் பூ குடிநீரை தொடர்ந்து பருகி வந்தால் உடலை நோயில்லாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் .

MUST READ