நகச்சுற்று எனப்படுவது நகக்கண்ணில் வருகின்ற பொன் அல்லது நகத்தின் வெளி ஓரத்தில் அல்லது நகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித் தொற்றாகும். இந்தத் தொற்று ஏற்பட்டதும் அந்த இடம் வீங்கி சிவந்து கடுமையான வலி ஏற்படும். இதனை தடுக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.
பொதுவாக நகம் கடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு இந்த கிருமி தொற்று அதிகம் ஏற்படுகிறது. அதேசமயம் கை சப்பும் பழக்கமுடைய குழந்தைகளுக்கும் நகச்சுற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. நகங்களை வெட்டி எடுக்கும் போது சற்று ஆழமாக வெட்டி விட்டால் நகமடல் சேதமாகி கிருமி தொற்று ஏற்பட்டு அதில் சீழ் பிடித்து நகச்சுற்று உண்டாகிறது.
நகங்கள் வளர வளர அவற்றின் இடுக்குகளில் அழுக்குகள் தேங்காய் வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி அதனை சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் சமயங்களில் அதன் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுடுதண்ணீரில் 10 முதல் பதினைந்து நிமிடங்களுக்கு விரல்களை மூழ்க வைப்பதன் மூலம் கிருமிகள் அழிந்து நகச்சுற்று விரைவில் குணமாகும். இதனை தினமும் நான்கு முறையாவது செய்ய வேண்டும்.
உடனடியாக மருத்துவரை அணுகி கிருமி எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். நகச்சுற்று ஏற்பட்ட பின் தண்ணீர் படாமல் அவ்விடத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இருந்த போதிலும் மருத்துவரை அணுகி முறையான பரிந்துரையை பின்பற்றுதல் அவசியம்.