இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இயற்கையிலையே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதில்லை. ஏனெனில் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை பலரும் துரித உணவுகளையே விரும்புகிறார்கள். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கேழ்வரகு, கோதுமை, சாமை, வரகு, திணை என்றுதான் சாப்பிட்டார்கள். அதனால்தான் அவர்கள் 100 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். ஆனால் இன்று 20 வயது இளைஞனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. காரணம் உணவு பழக்கவழக்கங்கள் தான்.
அதுபோல நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றனவா என்று கேட்டால் இல்லை. அதனாலயே பல நுண்கிருமிகள் எளிதில் உடம்பில் பரவி விடுகின்றன. இது போன்ற வைரஸ், பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதலில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது அவசியமான ஒன்றாகும்.
தினமும் நாம் உண்ணும் உணவுகளுடன் சில சத்தான காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொண்டால் இயற்கையிலேயே நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
1. அந்த வகையில் ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாச்சி, திராட்சை, சாத்துக்குடி, பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய் போன்றவைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
2. மேலும் பீட்ரூட், கேரட், இஞ்சி மஞ்சள், பூண்டு, கத்தரிக்காய், குடைமிளகாய், கீரை, சக்கர வள்ளி கிழங்கு பனை கிழங்கு போன்ற காய்கறிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
3. கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்டவைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன.
இவை அனைத்தையும் நாம் தினமும் உட்கொண்டால் பலவகையான நோய்க்கிருமிகளிடமிருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம் .