Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்எண்ணெய் வடியும் சருமத்தால் கவலைப்படுகிறீர்களா?..... உங்களுக்கான தீர்வு இதோ!

எண்ணெய் வடியும் சருமத்தால் கவலைப்படுகிறீர்களா?….. உங்களுக்கான தீர்வு இதோ!

-

எண்ணெய் வடியும் சருமத்தால் கவலைப்படாதீங்க. இதோ உங்களுக்கான தீர்வு:எண்ணெய் வடியும் சருமத்தால் கவலைப்படுகிறீர்களா?..... உங்களுக்கான தீர்வு இதோ!

முதலில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்து வர முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தலாம்.

அடுத்தது வெள்ளரிக்காயை அரைத்து அதனை இரவு நேரங்களில் முகத்தில் தடவி அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவ நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழிவி சுத்தம் செய்ய வேண்டும்.எண்ணெய் வடியும் சருமத்தால் கவலைப்படுகிறீர்களா?..... உங்களுக்கான தீர்வு இதோ!

அதுபோல கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி வர எண்ணெய் சுரப்பு குறைந்து முகம் பளபளப்பாக மாறிவிடும்.

ஓட்ஸ், கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஸ்கிரப் போல பயன்படுத்த வேண்டும். இம்முறையை வாரம் இரண்டு முறை பின்பற்றி வர வித்தியாசத்தை நீங்களே காணலாம்.

தக்காளியின் சாறு எடுத்து அதனை காட்டன் துணியால் தொட்டு முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்பு தண்ணீரில் கழுவ எண்ணெய் பிசுக்குகள் நீங்கும்.எண்ணெய் வடியும் சருமத்தால் கவலைப்படுகிறீர்களா?..... உங்களுக்கான தீர்வு இதோ!

இது தவிர எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை உண்பதை தவிர்த்தால் கூடுதல் சிறப்பு.

இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அல்லது ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.

MUST READ