Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பற்களில் மஞ்சள் கறையா?.... இதோ உங்களுக்கான டிப்ஸ்!

பற்களில் மஞ்சள் கறையா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்!

-

நாம் பள்ளி படிக்கும்போதே நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால் இன்றுவரையிலும் அதை சிலர் பின்பற்றினாலும் சிலர் அதை பின்பற்றுவதில்லை. பற்களில் மஞ்சள் கறையா?.... இதோ உங்களுக்கான டிப்ஸ்!குறிப்பாக உணவு அருந்திய பிறகு வாயை நன்கு கொப்பளிக்கும் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். அடுத்தது காலை எழுந்தவுடன் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து அதன் பின்னர் பல்துலக்கினால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். தினமும் இதை செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மேலும் பற்பசைக்கு பதிலாக மஞ்சளை பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். அதைத்தொடர்ந்து அந்த மஞ்சள் கறையை நீக்க பற்பசையை பயன்படுத்தி பல் துலக்கலாம்.பற்களில் மஞ்சள் கறையா?.... இதோ உங்களுக்கான டிப்ஸ்!

மேலும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் இரண்டு ஸ்பூன் அளவு தண்ணீர் கலந்து இந்த கலவையை பயன்படுத்தியும் பல் துலக்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பாக ஆரஞ்சு பழத் தோலின் உட்பகுதிகளை பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பற்கள் வெண்மையாவதை காணலாம்.பற்களில் மஞ்சள் கறையா?.... இதோ உங்களுக்கான டிப்ஸ்!

அடுத்தது மவுத் வாஷுடன் சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகர் கலக்கி ஒருமுறை வாயை கொப்பளித்து வர பற்களில் இருக்கும் மஞ்சள் நிறம் நீங்கும். (குறிப்பு: ஆப்பிள் சைடர் வினிகர் பல் சிற்பி சிதைவதற்கு வழிவகுக்கும் என்ற காரணத்தினால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. எனவே இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு இந்த முறையை பின்பற்றுவது நல்லது.

MUST READ