இன்றுள்ள காலகட்டத்தில் உணவு முறைகளின் மாற்றத்தால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு பெண்கள் மட்டும் காரணம் என்ன ஆண்களுக்கு ஆண்மை சக்தி குறைவாக இருப்பதும் காரணம் தான். எனவே ஆண்மை சக்தியை அதிகரிக்க ஒரு அருமையான ட்ரிங்க் பற்றி இப்போது பார்க்கலாம்.
முதலில் பாதாம் பிசினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் பேரிச்சம்பழம், கசகசா, பிஸ்தா, ஜாதிக்காய், ஏலக்காய், பாதாம், வெள்ளரி விதை ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து இதையும் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
இப்போது மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் ஊற வைத்துள்ள பாதாம் பிசினை வடிகட்டி எடுத்து அதனை தனி பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பால் ஊற்றி, ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி ஆற வைக்க வேண்டும். இப்போது இந்த பாலில் ஒரு ஸ்பூன் அளவு பாதாம் பிசின், ஒரு ஸ்பூன் அளவு தேன், ஒரு ஸ்பூன் அளவு அரைத்து வைத்துள்ள நட்ஸ் பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இந்த ட்ரிங்கை இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் இதை பருகிவர ஆண்மை பெருகும். திருமணம் நிச்சயக்கப்பட்டவர்கள், திருமண வரன் தேடுபவர்கள், திருமணம் முடிந்தவர்கள் யாராக இருந்தாலும் இதை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
இருப்பினும் உங்கள் மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.