மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடற்பயிற்சி பெரிதளவு உதவுகிறது. அதன்படி அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து வந்தால் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்களாவது தொடர்ச்சியாக நடக்க வேண்டும். இவ்வாறு நடப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். அதேபோல் இரவு உணவிற்குப்பின் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இது செரிமான கோளாறுகளை சரி செய்யும். மேலும் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும்.
அது மட்டும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைத்திருக்க தியானம் என்பது இன்றியமையாத ஒன்று. குளிர்காலங்களில் சில சமயங்களில் அயற்சி ஏற்பட்டாலும் தியானம் உங்களை புத்துணர்வாக வைத்திருக்க உதவும்.
நடனம் என்பதும் உடற்பயிற்சிகளில் சிறந்தவை ஆகும். ஆகவே குளிர்காலங்களில் வீட்டுக்குள் இருந்த படி யோகா, நடனம் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சிறந்த பயன்களை அடையலாம்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகாலையில் எழுந்து 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு பின் மாலையில் நடை பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
எந்த வித உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் மருத்துவரை ஆலோசித்த பிறகே செய்ய வேண்டும். மேலும் குளிர் காலங்களில் வெளியே சென்ற உடற்பயிற்சி செய்யும் பொழுது மேலாடை, சாக்ஸ், கையுறை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.