மாமன்னன் என்னும் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வடிவேலு பகத் பாஸில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த அடுத்த அடுத்த தகவல்கள் பரவலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வகையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் மற்றும் இரண்டாம் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலரும் நாளை வெளியாக இருக்கிறது என்று பட குழுவினர் அறிவித்துள்ளனர்.