மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவரை ஆன் லயன் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 92 லட்சம் ரூபாய் ஆன்லைன் பணமோசடி செய்த வழக்கில் மூன்று நபர்கள் கைது.
கடந்த ஜுலை மாதம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவரை Online Trading-ல் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பேஸ்புக்கில் வெளியான தகவலை பார்த்து தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை கேட்டு ரூ.92,16,710/-ஐ பல்வேறு வங்கி கணக்குகளின் முலமாக அனுப்பி வைத்துள்ளார். இதற்காக Wallet ஒன்றை உருவாக்கி அதில் பணம் இருப்பது போன்று காட்டி உள்ளனர். ஆனால் பணத்தை வெளியில் எடுக்க முயன்ற போது தான் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இது பற்றி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.21,08,703/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது .
கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் ….. ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு!
அதில் , Bandhan வங்கி கணக்கை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்த நித்தீஷ்குமார், சந்திரசேகரன் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் சவுரியார்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது.3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் Bandhan வங்கியில் நடப்பு வங்கி கணக்கு ஒன்றினை நித்தீஷ்குமார் மூலமாக ஆன்லைன் பணமோசடி செய்வதற்கு உருவாக்கி நாடு முழுவதும் 3 கோடி ருபாய் வரை மோசடியில் ஈடூபட்டு உள்ளனர். இந்த குற்றச்செயலுக்கு பயன்படுத்திய லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.