Homeசெய்திகள்என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை - சீமான் புதிய விளக்கம்

என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை – சீமான் புதிய விளக்கம்

-

என் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லை என்று சீமான் புதிய விளக்கத்தை கொடுத்து தனது புத்திசாலி தன்மையை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளதாக சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது என் கட்சிப் பிரச்சினை, மக்கள் பிரச்சனை கிடையாது. அதனால் இதைப்பற்றி கேள்வி எழுப்ப வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அப்படி என்றால் கட்சிக்கும் மக்களுக்கும் சம்மந்தம் இல்லையா என்று அக்கட்சியினர் வெளிப்படையாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தொடங்கி 14 ஆண்டுகள் ஆகிறது. அக்கட்சி சந்தித்து வந்த ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வாக்குகள் அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 8.1 சதவீதம் வாக்குகளை பெற்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கட்சியின் தலைவர் சீமானுக்கும் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுக்கும் இடையே பெரிய அளவில் முரண்பாடுகள் எழுந்து இருக்கிறது. அதனால் திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் என்று தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு கூண்டோடு வெளியேறி உள்ளனர்.

அதேபோன்று மாநில நிர்வாகிகள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி வரிசையில் தற்போது காளியம்மாளும் வெளியேற உள்ளார். தொடர்ச்சியாக மாவட்ட, மாநில நிர்வாகிகள் சீமான் மீது அதிருப்தி அடைந்து வெளியேறி வருகின்றனர். அல்லது கட்சியில் தனி செல்வாக்கு பெரும் காளியம்மாள் போன்ற நபர்கள் சீமானாள் வெளியேற்றப் படுகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினாள், இது என் கட்சிப் பிரச்சினை; மக்கள் பிரச்சனை கிடையாது என்று சீமான் பதில் அளிக்கிறார். மேலும் ஒரு சிலர் கட்சியை விட்டு வெளியேறுவதால் மக்களுக்கு ஏதாகிலும் பாதிப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகிறார்.

நாம் தமிழர் கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லை. கட்சி வேற, மக்கள் வேறு. இரண்டையும் தொடர்பு படுத்த வேண்டாம் என்ற பொருளில் சீமான் பேசுகிறார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கட்சியை தொடங்கினார். இப்போது கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லை என்று பேசுகிறார். அவருடைய கட்சி காலப்போக்கில் மக்களுக்கு தொடர்பு இல்லாமல் போய்விடுமோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

MUST READ