Homeசெய்திகள்ஒலிம்பிக்கில்  இந்திய வீராங்கனை பெயர் இடம்பெறவில்லை

ஒலிம்பிக்கில்  இந்திய வீராங்கனை பெயர் இடம்பெறவில்லை

-

இந்திய தடகள வீராங்கனை உலக தரவரிசை பட்டியல் 21 இடம் பிடித்த ஆபா கதுவா என்கிற குண்டறிதல் வீராங்கனையின் பெயர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை.

ஒலிம்பிக்கில்  இந்திய வீராங்கனை பெயர் இடம்பெறவில்லை2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக விளையாடச் சொல்லும் 117 பேர் கொண்ட வீரர் வீராங்கனைகளின் பெயர் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது இதில் உலகத்தரம் வாய்ந்த தேசிய அளவில் சாதனை படைத்த அபா கதுவாவின் பெயர் இடம்பெறவில்லை அதற்கான காரணத்தையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிக்காததால்  தடகள வீரர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டு தாய்லாந்தின் ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அபா கதுவா 18.06 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனையை படைத்தார்.  இந்த போட்டியில் அபா கதுவா வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத் பெற்று தந்தார்.

 

கடந்த மே மாதம் ஃபெடரேஷன் கோப்பையில் 18.41 மீட்டர் தூரம் குண்டு எரிந்து தேசிய சாதனையை படைத்த அபா கதுவா உலக தரவரிசை பட்டியலில் 21-வது இடம் பிடித்திருக்கிறார் ஆனால் இவருடைய பெயர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை என்பது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ