யூடியூபர் இர்ஃபான் வீடியோ பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் மகப்பேறு மருத்துவர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் அனுரத்னா,, ‘‘கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என தெரிருந்தும் இர்பான் தனது யூடியூப் பக்கத்தில் தன் மனைவி கருத்தரித்து இருப்பதும், அவர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்றும் காணொளி வெளியிட்டார்.
அது விவாதம் ஆனதும், பலரும் அதை எதிர்க்க தொடங்கியதும், இங்கு எங்கும் கருவின் பாலினம் கண்டுபிடிக்கவில்லை. தான் வெளிநாட்டில் தான் தன் மனைவியின் கர்ப்பபையில் இருப்பது ஆணா? பெண்ணா? என பார்த்ததாக சொல்லி, வெளிநாட்டில் இதற்கு அனுமதி உண்டு என்றும் சொல்லி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மன்னிப்பும் கேட்டார் இதற்கு.
இன்றைய செய்தியில் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கினார் என்று பார்த்ததும் ஒரு மகப்பேறு மருத்துவர் என்கிற முறையில் அவரின் யூடியூப் சேனலுக்கு டூப் சென்று பார்த்தேன். அவ்வளவு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது அதில்.
யோனி பிரசவம் பார்க்கும் இடத்தில் மட்டுமே ஒரு உடனாளி (birth companion)இருக்க அரசு அனுமதிக்கிறது. ஒவ்வொரு யோனி பிரசவத்தின் போதும் அந்த தாயின் உறவினர் ஒருவர் உடன் இருக்கலாம், அது பிரசவம் சார்ந்த பயத்தினை போக்கி குடும்ப சூழலோடு ஒரு பயமற்ற பாதுக்காப்பான பிரசவத்தை அந்த தாய்க்கு தரும் என்பதால்.
ஆனால் இந்த காணொளியில் கணவன் மனைவி பாலியல் உறவு கொண்டு கருமுட்டையும் விந்தணுவும் இணைவதை தவிர மற்ற எல்லாத்தையும் இர்பான் காட்டி இருக்கிறார் தனது காணொளியில். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் செல்கிறார். Unsteriled ஆக தான். ஊதா நிறத்தில் ஒரு துணியை போட்டால் அது sterile என அந்த மருத்துவமனை நிர்வாகம் நினைக்கிறதா எனத் தெரியல எனக்கு.
வயிற்றை கிழிப்பதை பார்க்கிறார்.எல்லாமே காணொளியாக பதிவு செய்கிறார்கள். குழந்தை பிறக்கிறது. பெண் குழந்தை என உடனே அறுவைசிகிச்சை செய்த மகப்பேறு மருத்துவர் சொல்கிறார். அடுத்தது “do you want to cut the cord” என அதே மருத்துவர் கேட்கிறார் இர்பானிடம், இர்பான் தலை அசைத்ததும் உடனே அவருக்கு glove கொடுங்க என்கிறார் அதே மருத்துவர்.
உடனே ஒரு set gloves கொடுக்கப்படுகிறது, அதை அணிகிறார் இர்பான், உடனே அவர் கையில் sterile scissor கொடுக்க படுகிறது, அவர் உடனே தொப்புள் கொடியை வெட்டுகிறார். அவர் ஏதோ பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவதுபோல் அவரை ஊக்கப்படுத்தகிறார் அந்த மகப்பேறு மருத்துவர்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் இந்த youtuber மீது வழக்கு தொடுக்க வேண்டும். சென்றமுறை தன் அரசியல் பலத்தால் தப்பித்தார் இவர் என்பதே உண்மை. மன்னிப்பு கேட்டார் விட்டுட்டோம் என்றால் இதற்கு முன் கருவின் பாலினம் கண்டறிதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எல்லாரிடமும் மன்னிப்பு கடிதம் வாங்கி விட்டு, அவர்களை விடுவித்து விட வேண்டியது தானே!நாளைக்கு இன்னொருத்தன் அதே தவறை செய்வான், அத்தவறை செய்யும் முன்பே மன்னிப்பு கடிதம் முன்கூட்டியே எழுதி வச்சுருப்பான்.
இந்த பிரசவம் நடந்த மருத்துவமனையில் உள்ள scan machine எல்லாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். கருவின் பாலினம் இதே மருத்துவரால் இதே மருத்துவமனையில் சொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.
இந்த பிரசவம் நடந்த மருத்துவமனையை முழுக்க ஆய்வு செய்ய வேண்டும். NABH accreditation அது இது சொல்லிக்கொண்டு ஒரு unsterile common manஐ அறுவை சிகிச்சை அரங்கில் விட்டு கத்தியை கொடுத்து தொப்புள் கொடியை வெட்டிய மருத்துவமனையின் அனைத்து quality related certificatesஐ திரும்ப பெற வேண்டும்.
இதை அனுமதித்த, ஊக்கப்படுத்திய அந்த மகப்பேறு மருத்துவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகினும் மருத்துவப்பணி செய்ய தடைவிதிக்க வேண்டும். இர்பானின் அரசியல் பின்புலம் என்ன, அந்த மருத்துவமனையின் அரசியல் பின்புலம் என்ன, அந்த மகப்பேறு மருத்துவரின் அரசியல் பின்புலம் என்ன என்று பார்த்து மன்னிப்பு கடிதம் பெற்றுக்கொண்டு மன்னித்து விட்டுச்சொல்ல இது பாவமன்னிப்பு வழங்கும் இடம் அல்ல இது சட்ட திட்டங்களை கடைபிடிக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் என்பதை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நிலைநாட்டும் என நம்புகிறேன்.
இல்லையேல் நாளைக்கே ஆயிரம் பேர் வீட்டில் இருந்தே கத்திரிக்கோலோடும் ஒரு வீடியோ கேமராவோடும் பொண்டாட்டிக்கு பிரசவம் ஆகும் மருத்துவமனைக்கு வந்து நாங்களும் ஆபரேஷன் தியேட்டர்குள்ள வருவோம், தொப்புள் கொடியை வெட்டுவோம், அதை பதிவு செய்வோம், அதை வியாபாரமாக்கி அதில் தான் சோறு திண்போம் என வந்தால் நாம் அந்த ஆயிரம் பேரையும் அனுமதிக்க முடியுமா?’’ எனக் கொந்தளிக்கிறார் மருத்துவர். அனுரத்னா