மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவிகள் வழங்காமல், அவருடைய கட்சி தலைமை அலுவலகத்தில் உதவி என்ற பெயரில் சூட்டிங் நடத்தியதாக எகஸ் பக்கத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார்.
அதில் 10 கிலோ அரிசி,பருப்பு,சக்கரைவேட்டி சேலை, துண்டு உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக வழங்கினார். நிவாரணம் வழங்கியதோடு அவர்களுக்கு மதிய விருந்தும் வழங்கினார் .
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று நிவாரண உதவிகளை வழங்காதது தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
தவெக மாநாட்டிற்கு நிலம் தந்த விவசாயிகளை அவர்களின் ஊரில் சந்தித்து, அந்த பகுதியில்.. விருந்தளித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் தனது பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து விருந்து வைத்தார். தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்குகிறார்.
ஒரு கட்சியின் தலைவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றால்தானே அங்குள்ள கள நிலவரத்தையும், பாதிப்பையும் காணமுடியும்?
இப்படி பாதிக்கப்பட்ட ஏழை மக்களை சிரமப்படுத்தி.. நீண்ட தூரம் பயணிக்க வைத்து தன் இடத்திற்கு வரவழைத்து உதவி செய்வது மன்னர் காலத்தில் கூட நடந்ததில்லை என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
இவர் தற்போது திமுகவை விமர்சனம் செய்கிறர்.
தமிழக முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் துயரங்களை கேட்டு ஆறுதல் சொல்லி வருபவர்களை, கட்சி அலுவலகத்தில் சூட்டிங் நடத்தும் விஜய் விமர்சனம் செய்யலாமா என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.