Homeசெய்திகள்அரசியல்அதே நாளில்... தேசிய அளவில் கவனம் பெற பொன்னார் போட்ட திட்டம்

அதே நாளில்… தேசிய அளவில் கவனம் பெற பொன்னார் போட்ட திட்டம்

-

- Advertisement -

po

தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று அதற்கு சரியான நாள் குறித்திருக்கிறார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ராகுல் காந்தி எம்பியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்ட வடிவங்களில் இந்த போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

ra

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமர் மோடியின் படத்துடன் சுடுகாட்டிற்கு சென்று மொட்டை போட்டு காங்கிரசார் பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து நாகர்கோவில் மாவட்ட பாஜக அலுவலகத்தை முற்றுகை இடுவதற்காக காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

பாஜக அலுவலகத்தின் அருகில் செல்லும் போது அவர்கள் மோடிக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதில் பாஜக தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்டார்கள். இதையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் சிலர் பாஜக அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தனர். இந்த மோதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. பாஜக கொடிகளும் வாகனங்களும் தீக்கிரையாகின . கட்சி வாசலின் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் கடும் சேதம் அடைந்தன. பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

m

நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ எம். ஆர் காந்தி இந்த தாக்குதலை கண்டித்து அப்போதே சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் இந்த விசயத்தில் அமைதி காத்து வந்தார். இதனால் கட்சிக்குள் அவருக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. உடனே ஏப்ரல் ஆறாம் தேதி இந்த பிரச்சனைக்காக தொண்டர்களை திரட்டி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் பொன்னார்.

அது ஏன் ஏப்ரல் ஆறாம் தேதி என்று முடிவு செய்தார் பொன்னார் என்று கேட்டால், 1980 ஆம் ஆண்டில் ஏப்ரல் ஆறாம் தேதி தான் பாஜக உதயமானது. அந்த நாளில் அகில இந்திய அளவில் பாஜகவினர் கொண்டாட்டங்களில் இருப்பார்கள். அதே நாளில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டத்தில் உட்கார்ந்தால் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற திட்டமிட்டு தான் ஏப்ரல் ஆறாம் தேதியை டிக் செய்துள்ளாராம் பொன்னார்.

MUST READ