Homeசெய்திகள்அரசியல்ஒருவர் நேரு, மற்றொருவர் எம்.ஜி.ஆர்

ஒருவர் நேரு, மற்றொருவர் எம்.ஜி.ஆர்

-

- Advertisement -

சின்ன எம்.ஜி.ஆர்., கருப்பு எம்.ஜி.ஆர் என்று பலர் வந்தாலும் ஒரே ஒரு சந்திரன் தான் ஊருக்கெல்லாம்; ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவுக்கும் நாட்டுக்கும் என்று சொல்லி வருகின்றனர் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள்.

எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்கள் அவருடன் மற்றவர்களை ஒப்பிடுவதை கூட விரும்ப மாட்டார்கள். எம்.ஜி.ஆரும் ரஜினியும் என்று இருவரையும் ஒப்பிட்டு ஒருபத்திரிகையில் தொடர் வந்தபோது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த தொடரினையே நிறுத்தி விட்டார்கள்.

இந்த நிலையில் , அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் எம்ஜிஆர் ஆக தொண்டர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இதுகுறித்து எம்.ஜி.ஆருடன் பழகியவரும், அதிமுகவின் முன்னாள் எம்பியுமான கே.சி.பழனிச்சாமி, சின்ன எம்.ஜி.ஆர் என்று வலம் வந்த சுதாகரன், இன்று எங்கே? கருப்பு எம்.ஜி.ஆர் என்று வலம் வந்த விஜயகாந்த், இன்று எங்கே? என்றும் ஒரே எம்.ஜி.ஆர் தான்! மக்களிடம் போலி வேடமிடும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக தொண்டர்கள் என்றும் தலைவரென்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்கிறார்.

மேலும்,1970 ஆம் ஆண்டு காலகட்டங்களில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பிரபல ஆய்வு நிறுவனம் இந்தியாவில் சாதி, மதம், பேதமற்ற அனைத்து தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுகிற மக்களை ஈர்க்கும் தலைவர்கள் யார் என்கிற மிகப்பெரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் இருவரை அறிவித்தது. அந்த ஆய்வு நிறுவனம் அவர்களில் ஒருவர் நேரு, மற்றொருவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

MUST READ