Homeசெய்திகள்அரசியல்பில்லு எங்க ஆடு ? திமுக விளாசல்

பில்லு எங்க ஆடு ? திமுக விளாசல்

-

 

#பில்லு_எங்க_ஆடு ? என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் தளத்தில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. திமுக ஐடி விங்க்தான் இந்த வேலையைச்செய்து வருகிறது என்று முணுமுணுக்கிறது அண்ணாமலை டீம்.

se

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கரூர் மாவட்டத்துக் காரர்கள் என்பதால் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் மோதல் போக்கு ஆரம்பத்தில் இருந்து இருந்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை ’சாராய அமைச்சர்’ என்று அண்ணாமலையும் , ’ஆடு’ என்று அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜியும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

trb

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன், முதல்வர் ஸ்டாலின் குடும்ப சொத்துக்களை வெளியிடுவேன் என்று அவ்வப்போது அண்ணாமலை சொல்லிக்கொண்டே வந்தபோது , எளிய மனிதர் என்று சொல்லிக் கொள்ளும் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் வாட்ச். அது 5 லட்சம் ரூபாய் என்று சொன்னார் செந்தில் பாலாஜி. உடனே அண்ணாமலை ஆதரவாளர்கள் ஸ்டாலின் மருமகன் கட்டியிருக்கும் வாட்ச் பல லட்சம் ரூபாய், அமைச்சர்கள் கட்டி இருக்கும் வாட்ச் பல லட்சம் ரூபாய் என்று பதிலடி கொடுத்து வந்தனர்.

app

’’தேசபக்தியின் காரணமாக ரபேல் வாட்ச்சை விரும்பி வாங்கிய கட்டியிருக்கிறேன்’’என்று அண்ணாமலை சொன்னதற்கு , ‘’கர்நாடகாவில் காவல்துறையில் இருந்தபோது ஒரு பஞ்சாயத்து செய்து வைத்ததற்கு பரிசாக கொடுக்கப்பட்டதுதான் அந்த வாட்ச்’’ என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்ல, ‘’தேசபகுதியினால்தான் அந்த வாட்ச் வாங்கி கட்டினேன். அது அரசியலுக்கு வருவதற்கு முன்பே நான் வாங்கினேன்’’என்று அண்ணாமலை சொல்ல, ‘’அப்படி என்றால் பில் இருக்குதா?’’ என்று செந்தில்பாலாஜி கேட்க, ‘’விரைவில் வெளியிடுவேன்’’ என்றார் அண்ணாமலை.

rr

பில் இருந்தால் உடனே காட்டவேண்டியதுதானே? பில் ரெடி செய்யணுமா? என்று கேட்டு கிண்டலடித்திருந்தார் செந்தில்பாலாஜி. அதற்கு அண்ணாமலை, ‘’ஏப்ரல் மாதத்தில் அந்த பில்லை வெளியிடுவேன். அத்துடன் திமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்’’ என்று கூறியிருந்தார்.

இன்று ஏப்ரல் முதல் தினம் என்பதால், ஏப்ரல்- ஆச்சு பில் என்னாச்சு அண்ணாமலை? என்று கேட்டு வருகின்றனர் திமுகவினர். இந்த கேள்வியை வாசலில் கோலமிட்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

#பில்லு_எங்க_ஆடு ? என்ற ஹேஷ்டேக்கினையும் திமுகவினர் வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். தேசிய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.

MUST READ