”தளபதியை சுத்தி தப்பு நடக்குது.. ஆனந்த் சாரை ரொம்ப புகழ்ந்து பேசுகிறார்கள்.. தலைவரும் அவரை நம்புகிறார்.. ஆனால் அதற்கு அவர் உண்மையாக இருக்கிறாரா..? எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க”என திருவண்ணாமலையை சேர்ந்த த.வெ.க. நிர்வாகி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ”தலைவர் விஜயை சுற்றி நிறைய தவறுகள் நடக்கிறது. எனக்கு பக்காவாக தெரிகிறது. ஆனந்தை சிலர் மிகவும் புகழ்ந்து பேசுகிறார்கள். புஸ்ஸி ஆனந்தை 100 சதவீதம் தலைவர் நம்புகிறார்.ஆனால், புஷி ஆனந்தை 100 சதவிகிதம் தலைவர் நம்புகிறார். ஆனால் அதற்காக ஆனந்த் உண்மையாக இருக்கிறாரா என்றால் உண்மையாகவே இல்லை. பணம், சாதி, விசுவாசம் இந்த மூன்றை வைத்து தான் பதவி தருகிறார்கள். விசுவாசம் என்றால் தலைவருக்கு விசுவாசமாக இல்லை. புஸ்ஸி ஆனந்துக்கு யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு பதவி தரப்படும். இப்போது ஒருவருக்கு ஆரணி மாவட்டத்தில் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். அதில் 15 பேரிடம் போட்டோ எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள ஒருவர் பக்கா அண்ணா திமுக. அவரது பையன் பக்கா அஜித் ரசிகர். தலைவரின் கடைசிப் படமான கோட்டுக்கு கூட ஒரு பத்துக்கு பத்து விளம்பரம் வைக்காதவர்.
கட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. அந்த மூன்று மாதத்தில் தலைவருக்காக ஒரு ரூபாய் செலவு பண்ணவில்லை. எதுவுமே செய்யவில்லை. உழைக்கவில்லை. பணத்தை விடுங்கள். எதுவுமே செய்யவில்லை உழைக்கவில்லை. அவரது குடும்பம் அண்ணா திமுகவில் இருந்து அண்ணா திமுக உடையும் போது டிடிவி.தினகரனுடன் சென்றவர்கள். எங்கள் தெருவில் டிடிவி. தினகரனுக்காக ஓட்டு கேட்டு வந்தார்கள். எந்த அடிப்படையில் அவருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது? இதற்கு ஆனந்த் சார் தான் பதில் சொல்ல வேண்டும். அதாவது விஜய் அவர்களே நேரடியாக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பாக சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை.புஸ்ஸி ஆனந்த் சார்க்கு யாரை பிடிக்கிறதோ அவருக்கு தான் பதவி கொடுப்பார். தலைவர் புஸ்ஸி ஆனந்தை 100% நம்புகிறார். நான் இந்த இயக்கத்தில் 12 வருடமாக இருக்கிறேன். என்னை கட்சியிலே இல்லை என்று ஆனந்த் சார் சத்யாவிடம் சொல்கிறார்.
ஏன் என்று கேட்டால் நான் ரவுடி. நான் அம்பேத்கர் நகரை சேர்ந்தவன் என ஒதுக்கி வைக்கிறார்கள்.அதாவது நீங்கள் எந்த தவறு செய்தாலும் ஆமாம் சார் ஆமாம் சார் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நான் நல்லவன். தப்பை தப்பு என்று கேட்பதால் ரவுடி. இதெல்லாம் பொய்யாக இருந்தால் நான் எப்படி வீடியோ எடுக்க முடியும். எந்த ஒரு உண்மையான தொண்டனும் தலைவருக்கு துரோகம் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். இப்போது 50% பேர் மரியாதையில்லை என்று தானாகவே ஒதுங்கி விட்டார்கள் கட்சியிலிருந்து. நீங்கள் எல்லாம் இப்படி அமைதியாக ஒதுங்கி விட்டால் நாளைக்கு பாதிக்கப்படப் போவது தலைவர் விஜய் மட்டும்தான். உண்மையான தொண்டனாக, உண்மையான தோழனாக இருந்தால் இங்கே நடப்பதைப் பற்றி நீங்கள் வெளியில் பேச வேண்டும். நமது உரிமை நமக்கு வேண்டும் என்றால் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
ஏனென்றால் தலைவருக்கே இங்கே நடப்பது எதுவுமே தெரியவில்லை. தலைமை எங்களை ஒரு நாய் போல நடத்துகிறது. அவங்களுக்கு பிடித்தவர்கள் மட்டும்தான் உள்ளே செல்ல முடியும். காலையில் சென்றால் எங்களை இருக்க விட்டு இரவு நேரத்தில் வாட்ச்மேன் வைத்து விரட்டுகிறார்கள்” எனத் தெரிவிவித்துள்ளார்