வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழர் இல்லை. அவர் தெலுங்கர் என்றும் திருடர் என்றும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழர் போர்வையில் திரியும் சிலர் விவாதத்தை கிளப்பி வருகின்றனர்.
மறைந்த தியாகிகளை குறித்தும், தலைவர்களை குறித்தும், அவர்கள் செய்த சாதனைகள் குறித்தும் கேள்விக்குள்ளாக்குவது அல்லது திரித்து வரலாற்றை மாற்றுவது பாஜக வின் வேலை திட்டங்களில் ஒன்று. அதே வேலையை நாம் தமிழர் கட்சியினரும் செய்து வருகின்றனர்
வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கரா? திருடரா? அவர் உண்மையில் யார் என்று இடதுசாரி சிந்தனையாளர் சூர்யா சேவியர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.
திருநெல்வேலி பகுதியில் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கெட்டிபொம்முலு என்ற வீரபாண்டியக் கட்டப்பொம்மன்.96 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியே இவரது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆங்கிலேயருக்கு வரி கொடுக்கமுடியாது என அறிவித்தார்.
கெட்டிப் பொம்மு என்ற தெலுங்குச் சொல்லுக்கு வீரமிக்கவர் என்று பொருள்.கெட்டிப் பொம்மு என்பதே மறுவி கட்டப் பொம்மு என்றும் கட்டப்பொம்மன் என்றும் ஆனது.
1798 ல் மேஜர்பானர்மென் தலைமையில் பெரும்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டது. அந்தப்போரில் கட்டப்பொம்மன் தப்பினார். கோட்டைத்தகர்க்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னனால் காட்டிக்கொடுக்கப்பட்டு 1799 அக்டோபர் 16 கயத்தாறு எனும் இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
ஆரியங்காவு கணவாயிலிருந்து வரும் காற்று ஆறாகப் பாயுமிடம் என்ற பொருளில் காற்றாறு என்று அதுவரை அழைக்கப்பட்ட இவ்வூரானது, கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு கயத்தாறு என்று மருவியது.
அந்த குறுகிய பகுதிக்குள் இருந்து கொண்டு வெள்ளையனை ஆட்டங்காணச் செய்தவர்.அவர் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் என்ற செய்தி அறிந்தவுடன் தனது ஜான்சி ராஜ்ஜியத்தின் எல்லைப் பகுதியிலுள்ள மரங்களின் கிளைகள் அனைத்தையும் வெட்டி எறிந்தார் லட்சுமி பாய்.
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்றும், தெலுங்கர் என்றும் நாக்பூர் தமிழர் கும்பல் கத்தி சுத்தும். அப்படியெனில்…கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையுடன் இருந்த முக்குலத்தைச் சேர்ந்த மருது சகோதரர்கள் கொள்ளைக்காரர்களா?
கட்டபொம்மனின் அவையில் தலைமை மந்திரியாக இருந்த சைவ வேளாளர் சமூகத்தை சேர்ந்த தானதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை கொள்ளையரா? தளபதி வெள்ளையத்தேவர் கொள்ளைக்காரரா?
மற்றொரு தளபதி தேவேந்திர குலத்தை சேர்ந்த வீரன் சுந்தரலிங்கம் கொள்ளைக்காரரா?கட்டபொம்மனின் ரகசிய உளவாளி வெண்ணிக்காலடி கொள்ளைக்காரரா?
கட்டபொம்மனோடு இருந்த அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பொட்டிபகடை, கந்தன் பகடை, முத்தன் பகடை கொள்ளைக் காரா்களா? கட்டபொம்மனிடமிருந்த காரணத்திற்காக நாடு கடத்தப்பட்ட வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாப்பிள்ளை வன்னியர், காளை வன்னியர் கொள்ளைக்காரா்களா?
ஊமைத்துரையுடனிருந்த நட்டாத்தி நாடார் கொள்ளைக்காரரா?கட்டபொம்மனோடு இருந்த ராவுத்தர்கள் கொள்ளைக்காரா்களா?கட்டபொம்மன் கொள்ளைக்காரர் என்றால், இத்தனை பேரும் உடனிருந்து உதவியது ஏன்?
மேற்கண்ட சாதிகளை சேர்ந்தவர்கள் கொள்ளைக்காரர்கள் என்று நாக்பூர் தமிழர்கள் சொல்வார்களா?