மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் என செல்வப் பெருந்தகை சுட்டிக்காட்டடியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியை சேர்ந்த மன்றத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிலர் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெறச் செய்ய, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரும் பணியாற்றுவதாகவும் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.
திமுகவுடன் செல்வப் பெருந்தகை 25 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டுள்ளார் என, எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்திற்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை,
திமுகவுடன் 250 வருடங்கள் ஒப்பந்தம் போட்டாலும் தவறில்லை என்று பழனிச்சாமிக்கு பதிலாக உரைத்தார்.
எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது 20-க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து இறந்ததாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த குஜராத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் நரேந்திர மோடி ஆட்சியில் இருந்த பொழுது விஷச்சாராயம் குடித்து, இறந்தனர் என்றும் தற்போதும் அது போன்ற சம்பவங்கள் அங்கு தொடர்வதாகவும் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்களை இடைநீக்கம் செய்துள்ளது உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாடுகள் ஏலம் விடப்படும் – கே.என்.நேரு (apcnewstamil.com)
2001-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 52 பேர் கள்ளச்சாராயம் உட்கொண்டு இறந்ததையும் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்பார்வை பறிபோனதையும் அதே ஆண்டில் சென்னை அருகே இருக்கக்கூடிய கொரட்டூர், ரெட்டில்ஸ் மற்றும் அம்பத்தூரில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு நடந்த அசம்பாவிதங்களையும் செல்வப் பெருந்தகை பட்டியலிட்டார்.